
உங்கள் மின்கழிவுகளைபசுமை பரிசுகளாக மாற்றுங்கள்உடனடி சேகரிப்பு, உடனடி சேவை
பழைய மொபைல்கள், லேப்டாப்புகள், பேட்டரிகள், மின்சாதனங்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பேக்கிங் பொருட்கள் பயன்பாடற்று உங்கள் வீட்டில் இருக்கிறதா?
அவையெல்லாம் நாங்கள் உங்கள் வீட்டு வாசலிலேயே வந்து சேகரிக்கிறோம். நம் சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்துக் கொள்ள சூழல் சிங்கம் எப்போதும் தயாராக உள்ளது!
சேகரிப்பு திட்டமிடுங்கள்
மாற்றத்தின் முதல் விதையை தூவியதற்கு நன்றிகள்!
காகிதத்தில் ஒரு plan-ஆக இருந்த சூழல் சிங்கம் முயற்சியை, செயலுக்கு கொண்டு வர உறுதுணையாய் இருந்த புத்தொழில் களம், மற்றும் மாண்புமிகு MP கனிமொழி கருணாநிதி அவர்களுக்கு எங்கள் மனம் நிறைந்த நன்றிகள். புத்தொழில் களம் எங்கள் முயற்சிக்கு ஒரு முக்கியமான திருப்புமுனையைத் தந்தது.
அவர்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையால்தான் சூழல் சிங்கம் பயணம் ஆரம்பமானது. இன்று எடுக்கும் ஒவ்வொரு அடியிலும் அந்த நம்பிக்கைதான் வழிகாட்டி. எங்கள் மனதில் அந்த நம்பிக்கையை என்றும் சுமந்துகொண்டு முன் செல்லுவோம் .
எங்கள் முயற்சிக்கு பேராதரவு அளித்த தூத்துக்குடி மக்களவை உறுப்பினர்
மாண்புமிகு எம்.பி. கனிமொழி கருணாநிதி
அவர்களுக்கு எங்கள் உள்ளம் நிறைந்த நன்றிகள்
இந்த முயற்சிக்கு சக்தியாக நிற்கும் ஆதரவு அமைப்புகள்


In Association with

பசுமை ட்ராக்கர்
சூழல் சிங்கம் உருவாக்கும் மாற்றங்களை – மின்கழிவு சேகரிப்பு முதல் கார்பன் வரவினம் வரை – நேரடியாக கண்காணியுங்கள் .




அறிதல் → வகைப்படுத்துதல் → மேலாண்மை
மின்கழிவு

பழைய கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன், ரெப்ரிஜிரேட்டர், வாஷிங் மெஷின், டிரையர், ஹோம் தியேட்டர், பேட்டரி பொம்மைகள், பயன்படுத்தாத சார்ஜர்கள், பழைய வயர்கள், பழுப்படைந்த மின் சாதனங்கள், இவை எல்லாம் நம் வீட்டில் பல மாதங்கள், வருடங்களாகச் செயலற்றுப் போனதால் பயன்படுத்தாமல், நம் வீடு பரண் மற்றும் பேரல்களில் வைத்திருக்கக்கூடும். இந்த மின் கழிவுகள் நிலத்தில் கலந்து, மண், நீர் போன்ற வளங்களை மாசுபடுத்தி, அதில் வாழும் உயிர்களைச் சேதப்படுத்தும். மின் கழிவுகளை அகற்றுவது மிகப் பெரிய சவாலான பணியாக உருவாகிக் கொண்டிருக்கிறது. அபாயகரமான இந்தக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்கு சூழல் சிங்கம் உறுதி அளிக்கிறது.
பிளாஸ்டிக் கழிவு

வீட்டில் காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் - குளிர்பான பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், ஷாம்பு பாட்டில்கள், பிளாஸ்டிக் தகடுகள், காகிதக் கோப்பைகள், பிளாஸ்டிக் குடிநீர் கேன்கள், ஸ்நாக்ஸ், பிஸ்கட், சிப்ஸ் டப்பாக்கள், ஹோட்டல் உணவுப் பொருட்களின் பிளாஸ்டிக் பேக்கேஜிங் - இவற்றை நாங்கள் உங்கள் வீட்டிற்கு வந்து சேகரித்து செல்கிறோம். ஒரு ஆண்டில் மட்டும் 19 முதல் 23 மில்லியன் டன் வரை பிளாஸ்டிக் கழிவுகள் நீர்வள சூழல்களில் கலந்து, ஏரிகள், ஆறுகள், கடல்களுக்கு மாசடைதலை ஏற்படுத்துகின்றன. ஒரு முறை பயன்படுத்தப்படும் பாட்டில்கள், கண்டெய்னர்கள் கூட கடல்களிலும் குப்பைக் கிடங்கிலும் சேர்கின்றன. இது இயற்கைக்கும் மனிதர்களின் நலனுக்கும் நேரடியான ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை. அவை பாதிப்பு ஏற்படுத்தும் முன், நாம் அதை தடைசெய்து, மறுசுழற்சிக்கு வழி செய்கிறோம்.
உலர் கழிவு

உலர் கழிவுகள் என்றால் மக்காத அல்லது மக்கும் தன்மையற்ற கழிவுகள். இதில் காகிதம், அட்டைப் பெட்டிகள், பிளாஸ்டிக், கண்ணாடி, உலோகம், பழைய ஆடைகள் போன்றவை அடங்கும். இவை ஈரமான கழிவுகளைவிட நிலத்தில் நீண்ட நாட்கள் இருந்து, சூழலைப் பாதிக்கும் தன்மையுடையவை. இத்தகைய கழிவுகள் பெரும்பாலும் மறுசுழற்சி செய்யக்கூடியவையாக இருக்கும். உதாரணமாக, காகிதம், பிளாஸ்டிக், கண்ணாடி, உலோகம் போன்றவற்றை மீண்டும் பயன்படச் செய்ய முடியும் — அது சரியாகப் பிரிக்கப்பட்டு சேகரிக்கப்பட்டால். இவ்வாறு உலர் கழிவுகளைப் பிரித்து, சரியான முறையில் செயல்படுத்துவதற்காகத்தான் சூழல் சிங்கம் (Soolal Singam) செயல்படுகிறது. நாங்கள் இந்தக் கழிவுகளை நிலத்தில் வசப்படாமல் தடுத்து, மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டிற்கு அனுப்புகிறோம்.
நீங்கள் ஏன் சூழல் சிங்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்?


We Always Show Up
உங்கள் கழிவுகளை அகற்ற இனி காத்திருக்க வேண்டாம். சூழல் சிங்கம் மூலம் ஒரே கிளிக்கில் முன்பதிவு செய்து முறையாக அகற்றலாம்.

Turn Waste into Trees
நாங்கள் எங்களிடம் தரும் ஒவ்வொரு கழிவுக்கும் பதிலாக மரங்கள் நடுகிறோம்.

Know Where It Goes
உங்கள் கழிவுகள் எங்கே மறுசுழற்சி செய்யப்படுகின்றன என்று அறிந்துகொள்ளலாம்.

Homegrown Tamil Pride
சூழல் சிங்கம் - நம் தமிழ் மக்களுக்காக, தமிழகத்தை கழிவு மேலாண்மையில் முன்னெடுத்துச் செல்ல தமிழகத்தில் உருவாக்கப்பட்டது.
சுழல் சிங்கத்தின் இயக்கம் - செயல்முறை
சூழல் சிங்கம் மின்கழிவு சவாலில் இணையுங்கள்!
இளம் தலைமுறையினர் அனைவரும் சூழல் சிங்கமாக மாறி மின்கழிவு சவாலை எதிர்கொண்டு, பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்க உற்சாகமாக பணியாற்றுகின்றனர்.
மேலும் அறிய

வீட்டிலிருந்தே முறையான மறுசுழற்சியைத் தேர்வு செய்யுங்கள்.
முறையான மறுசுழற்சி இயக்கத்தில் இணைய தயாரா? சரியான மறுசுழற்சி நம் அனைவரின் கடமை.
சேகரிப்பு நேரத்தைப் பதிவு செய்யுங்கள்.

இந்தியாவின் முதல் ஸ்மார்ட் மின்கழிவு + பிளாஸ்டிக் தொட்டி உங்கள் அருகில் உள்ளது.
Proudly starting right here in Tamilnadu!
எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.நீங்கள் இன்று முறையான மறுசுழற்சிக்காக எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும், சிறப்பான சுத்தமான தமிழகத்தை உருவாக்க ஒரு பங்களிப்பு.